தண்டவாளத்தில் நின்றுக்கொண்டிருந்த பெண் - மயிரிழையில் காப்பாற்றிய போலீஸ்காரர் - வைரல் வீடியோ

samugam-viral-video
By Nandhini Sep 12, 2021 12:02 PM GMT
Report

ரயில்வே தண்டவாளத்தின் நடுவில் நின்றுகொண்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு போலீஸ்காரர் ஓடிச் சென்று காப்பாற்றிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் நேற்று நடந்துள்ளது.

நேற்று காலை 10 மணியளவில் வசாய் சாலை ரயில் நிலையத்திற்கு தஹனு-அந்தேரி உள்ளூர் ரயில் நெருங்கியபோது, ரோந்துப் பணியில் இருந்த போலீஸ்காரர் ஏக்நாத் நாயக் ரயில் தண்டவாளத்தின் நடுவில் பெண் ஒருவர் நிற்பதைப் பார்த்தார். அந்தப் பெண்ணைக் கண்டவுடன், நாயக் உடனடியாக ரயிலை நிறுத்துமாறு மோட்டார் வாகனத்தில் சமிக்ஞை கொடுக்கத் தொடங்கினார்.

அந்த பெண்ணின் அருகில் வந்த பிறகுதான், ரயில் நின்றதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரயில்வே மேம்பாலத்தின் மீது நின்ற போலீஸ்காரர்கள் சிலரையும் நாயக் எச்சரித்துள்ளார். அதேபோல், இரண்டு ரயில்வே பாதுகாப்பு படை காவலர்களும், நாயக்கிற்கு உதவி செய்ய விரைந்ததாக பிடிஐ தெரிவித்திருக்கிறார்.

அந்தப் பெண்ணைக் காப்பாற்ற நாயக் செய்த முயற்சிகளை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டி உள்ளனர். அதேபோல் ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததற்காக தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக நாயக் (Naik) தெரிவித்துள்ளார். தனக்கு உதவி செய்த சகாக்களுக்கும் ஆர்.பி.எஃப் பணியாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.