ரூ.10 ஆயிரம் தர்றேன்.. ஒரே ஒரு நாள் நைட் உன் மனைவியை அனுப்புன்னு சொன்ன முதியவருக்கு நேர்ந்த கதி!
நவி மும்பை பகுதியைச் சேர்ந்தவர் ஷமாகந்த் துகாராம் நாயக் (80). இவருக்கு வீடுகள், நிலங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என்று பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது. இவர் தினமும் நடைபயிற்சிக்காக அதே பகுதியில் இருக்கும் கடைக்கு அடிக்கடி சென்று வருவார். அதனால் அந்த கடை நடத்தி வந்த 33 வயது இளைஞரிடம் நண்பராக பழகி வந்தார்.
அவரது மனைவியும் இவருடன் நன்றாக பழகி வந்துள்ளார். இந்நிலையில், திடீரென அந்த இளைஞரிடம், அந்த முதியவர் உன் மனைவியுடன் சந்தோசமாக இருக்க வேண்டும். அதற்காக ரூ.5 ஆயிரம் தருகிறேன். ஒரு இரவு மட்டும் அனுப்பி வை என்று கேட்டுள்ளார். முதியவர் திடீர் என்று இப்படி கேட்கவும் அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து, மறுநாள் மீண்டும் கடைக்கு சென்று ரூ.10 ஆயிரம் தருகிறேன். இப்போது சம்மதமா என்று கேட்டுள்ளார். முதல் நாள் பொறுமையாக இருந்த அந்த இளைஞர், மறுநாள் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். உடனே, நாயக்கை பிடித்து கீழே தள்ளிவிட்டுள்ளார். கீழே விழுந்து கிடந்த அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பின்னர் கடையை சாத்திவிட்டு, முதியவரின் சடலத்தை கடையின் கழிவறையில் மறைத்து வைத்துள்ளார். மறுநாள் வந்து சடலத்தினை ஒரு பெட்சீட் ஒன்றினால் போர்த்தி சுற்றி வைத்து அதை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்று பக்கத்தில் இருந்த குளத்தில் சடலத்தை தூக்கி எறிந்துவிட்டு வந்துவிட்டார்.
இதனையடுத்து, முதியவரின் மகன் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். மதியம் வீட்டை விட்டு சென்ற என் தந்தை வீட்டுக்குத் திரும்பி வரவில்லை என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
முதியவருக்கு சொத்துக்கள் அதிகமாக இருப்பதால் சொத்துக்களை அபகரிக்க கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அன்று மதியம் முதியவர் நாயக் அங்குள்ள கடை ஒன்றுக்கு சென்றது தெரியவந்துள்ளது.
அங்கு சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அந்தக் கடைக்காரரை பிடித்து விசாரித்தபோது தான் நடந்த உண்மையை போலீசாரிடம் கூறினார். இதனையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.