கோவை அருகே ஓடும் காரிலிருந்து தூக்கிவீசப்பட்ட பெண் - அதிர வைத்த சிசிடிவி காட்சி!

samugam-viral-news--crime
By Nandhini Sep 07, 2021 05:29 AM GMT
Report

கோவை சின்னியம்பாளையம் சோதனைச்சாவடி அருகே கார் ஒன்றிலிருந்து பெண் சடலம் விழுவது போன்ற சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி தற்போது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கோவை சின்னியம்பாளையம் சோதனைச்சாவடி அருகே சாலை விபத்தில் இறந்து போன நிலையில், 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்றை போலீசார் மீட்டனர்.

இன்று அதிகாலை மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தின் மீது அடுத்தடுத்து சில வாகனங்கள் ஏறியதால் உருக்குலைந்த நிலையில் அப்பெண் உடல் இருந்ததால், இறந்துபோன பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து பீளமேடு போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர்.

அப்போது, பெண் விழுந்து கிடந்த இடத்தில் ஸ்கார்ப்பியோ கார் செல்லும் சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்திருக்கிறது. கார் கடந்த போது பெண்ணின் சடலம் காரிலிருந்து கிழே விழுவது போல காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

காரில் அந்த பெண்ணை அழைத்து வந்தவர்கள், சாலையில் அப்பெண்ணை தள்ளிவிட்டு சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து, வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இறந்த பெண் யார் என்பது குறித்தும், ஸ்கார்ப்பியோ கார் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.   

கோவை அருகே ஓடும் காரிலிருந்து தூக்கிவீசப்பட்ட பெண் - அதிர வைத்த சிசிடிவி காட்சி! | Samugam Viral News Crime