தலையில் ஓங்கி அடித்த கணவன் - மூளையில் ரத்தம் கசிந்து மயங்கி விழுந்த மனைவி! அடுத்து நடந்த விபரீதம்
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் முத்து (40). இவரது மனைவி விஜயலட்சுமி (34). இந்த தம்பதிக்கும் 14 வயதில் மகளும், 10 வயதில் மகனும் இருக்கிறார்கள். முத்து செங்குன்றம் சாலையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
காலையில் பேக்கரி கடைக்கு செல்லும் முத்து தினமும் மதிய உணவுக்காக வீட்டுக்கு வருவது வழக்கம். அந்த சமயத்தில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு மாலை வரைக்கும் ஓய்வெடுப்பார்.
அந்த இடைப்பட்ட நேரத்தில் விஜயலட்சுமி பேக்கரிக்கு சென்று வியாபாரத்தை கவனித்து வருவாராம். இதனையடுத்து, கடந்த 14ம் தேதி அன்று விஜயலட்சுமியை கடைக்கு அனுப்பி விட்டு வீட்டில் இருந்துள்ளார் முத்து.
வழக்கம் போலவே விஜயலட்சுமி கடைக்குச் சென்று வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். ஆனால், கணவன் மீது விஜயலட்சுமிக்கு கொஞ்ச நாட்களாகவே சந்தேகம் இருந்து வந்துள்ளது. அந்த சந்தேகத்துடனேயே மாலையில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
‘என்னை தினமும் கடைக்கு அனுப்பி விட்டு வீட்டில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்’ என்று முத்துவிடம் கேட்டு சத்தம் போட்டுள்ளார். நான் ஓய்வு எடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார் முத்து. இல்லை, என்னை அனுப்பி விட்டு வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று மீண்டும் கேட்டு சத்தம் போட்டுள்ளார் விஜயலட்சுமி.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. விஜயலட்சுமி தொடர்ந்து கேட்டு சத்தம் போட்டுக்கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த முத்து, விஜயலட்சுமியை தலையிலும் முகத்திலும் ஆவேசமாக ஓங்கி அடித்துள்ளார்.
உடனே விஜயலட்சுமிக்கு வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் முத்துலட்சுமியை தூக்கிக்கொண்டு ஸ்டான்லி மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.
மருத்துவமனையில் விஜயலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால், விஜயலட்சுமி அபாய கட்டத்தில் உள்ளார் என்றும் தெரிவித்த மருத்துவர்கள் விஜயலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு விஜயலட்சுமி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, விஜயலட்சுமியின் உறவினர் சித்ரா அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில், முத்துவை போலீசார் கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.