இறந்துபோன தாயின் உடலை தகனம் செய்த மகன் - உயிருடன் திரும்பி வந்ததால் அதிர்ச்சி...!

By Nandhini Sep 22, 2022 06:29 AM GMT
Report

இறந்து போன மூதாட்டியின் உடல் தகனம் செய்யப்பட்டபிறகு, உயிருடன் திரும்பி வந்ததால் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் அடிபட்டு உயிரிழந்த மூதாட்டி 

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, அம்பேத்கர் நகர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரா (72). இவருடைய கணவர் சுப்ரமணி. சுப்ரமணி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனையடுத்து சந்திரா மகன் வடிவேலுவுடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி அருகே காலை 8.30 மணியளவில் செங்கல்பட்டு – தாம்பரம் இடையே தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இந்த விஷயம் கிராம மக்களிடம் பரவியது.

இதனையடுத்து, ரயிலில் அடிபட்டு சந்திரா இறந்து விட்டதாக கிராமத்தினரும், உறவினர்களும் கருதியுள்ளனர். இறந்த மூதாட்டியின் உடல் செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

samugam

தாயின் உடலை தகனம் செய்த மகன்

இதனையடுத்து, இறந்து போன வடிவேலு உயிரிழந்தது தாயார் என்று உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று முன்தினம் உறவினர்கள் அனைவரும் வந்து சந்திராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

ஊர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, சந்திராவின் உடலுக்கு அவரது மகன் இறுதி அஞ்சலி செலுத்தி, தகனம் செய்தார்.

உயிருடன் திரும்பி வந்த தாய்

இந்நிலையில், நேற்று காலை சந்திரா உயிருடன் வீட்டிற்கு வந்துள்ளார். இதைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியும், சந்தோஷமும் அடைந்தனர்.

இதனையடுத்து, போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சந்திராவிடம் விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில் சந்திரா கூறுகையில், நான் அடிக்கடிக்கு கோயிலுக்கு செல்வது வழக்கம். சிங்கப்பெருமாள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வந்துள்ளேன் என்று கூறினார்.

இதனையடுத்து, போலீசார் இறந்து புதைக்கப்பட்ட சடலம் யாருடையது என்று மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.     

samugam