பெண் வேட மணிந்து பர்தாவுடன் சுற்றித்திரிந்த இளைஞர்... - பிடித்து விசாரணை நடத்திய போலீசார்...!
பெண் வேட மணிந்து பர்தாவுடன் சுற்றித்திரிந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண் வேடம்
கர்நாடகாவில் பெண் வேடத்துடன் பர்தா அணிந்து சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகா, விஜயபுரா மாவட்டம், அலமட்டி அணை அருகே பர்தா அணிந்தவாறு ஒரு பெண் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். பர்தா அணிந்த அப்பெண் நீண்ட நேரமாக அதே பகுதியில் சுற்றுக்கொண்டிருந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு சற்று சந்தேகம் ஏற்பட்டது.

போலீசார் விசாரணை
இதனையடுத்து, அப்பெண்ணை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பெண் இல்லை அவர் ஒரு ஆண் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக அவரிடம் போலீசார் விசாரித்தனர்.
அப்போது அந்த நபர் விசாரணையில், நான் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்தவன். என் பெயர் மல்லிகர்ஜூனா சுவாமி. எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. ஆனால், என் வீட்டார் எனக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால், கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். என்னை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக பெண் வேடம் அணிந்து பர்தாவுடன் சுற்றிக்கொண்டிருந்தேன் என்றார்.
இதனையடுத்து, அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.