இலங்கை தமிழர் நிவாரணத்திற்காக பிச்சை எடுத்து ரூ.10,000ம் வழங்கிய முதியவர்...! - நெகிழ்ச்சி சம்பவம்
தூத்துக்குடியில் முதியவர் ஒருவர் இலங்கை தமிழர் நிவாரணத்திற்காக பிச்சை எடுத்து ரூ.10,000 வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டில் எரிபொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.
பிச்சை எடுத்து நிதியுதவி அளித்த முதியவர்
தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணற்றை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (72). இவர் அப்பகுதியில் பிச்சை எடுத்து தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
நேற்று வேலூர் மாவட்ட அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. அங்கு, பூல்பாண்டியன் கோரிக்கை மனுவுடன் வந்திருந்தார். இலங்கை தமிழர்களுகாக நான் பிச்சையெடுத்து சேர்த்து வைத்த ரூ.10 ஆயிரத்தை தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் கேட்டுக்கொண்டார். அந்த மனுவையும், ரூ.10 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பெற்றுக்கொண்டார்.