முரட்டுப் பார்வையில் விஜய் தேவகொண்டா வெளியிட்ட புகைப்படம் - வைரலாக்கிய ரசிகர்கள்
தென்னிந்திய பெண்களின் லேட்டஸ்ட் ட்ரீம் பாயாக வலம் வருகிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா.
அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், நோட்டா, நடிகையர் திலகம், டாக்ஸி வாலா என தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். பெண்களை வசிகரீக்கும் அழகான சிரிப்பை கொண்டு இருக்கும் இவருக்கு ரசிகைகள் எக்கச்சக்கம். தமிழ், தெலுங்கு மொழிகளில் கலக்கி வரும் விஜய் தேவரகொண்டா அடுத்ததாக பாலிவுட்டிலும் அசத்த ரெடியாகி விட்டார்.
தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாக உள்ள ஃபைட்டர் படத்தில் இவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய சினிமா உலகில் சாக்லேட் பாயாகவும், ரொமான்டிக் ஹீரோவாகவும் தனக்கென ஒரு தனி ஸ்டைலை வைத்துக் கொண்டு கெத்துக் காட்டி வருகிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா.
தற்போது, பாக்ஸிங் சேம்பியன் மைக் டைசன் விஜய் தேவகொண்டா நடிக்கும் லைகர் (Liger, Lion - Tiger) படத்தில் கௌரவ வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத், விஜய் தேவகொண்டா நடிப்பில் லைகர் என்ற படத்தை இயக்கி வருகிறார். கொரோனா பெருந்தொற்றால் படப்பிடிப்பு முடங்கிய நிலையில், சமீபத்தில்தான் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினர்.
இதில் விஜய் தேவரகொண்டா பாக்ஸராக நடிக்கிறார். இந்தப் படத்தில் மைக் டைசன் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் முரட்டுப்பார்வையில் வித்தியாசமாக தோற்றமளிக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம் -