புதிய புயல் சின்னமாக அரபிக் கடலில் எழுந்த குலாப் புயல் - வானிலை ஆய்வு மையம் தகவல்
samugam-viral-news
By Nandhini
வங்கக்கடலில் ஆந்திரா, ஓடிசா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சூறையாடிய குலாப் புயல் வலுவிழந்துள்ளது. இருந்தாலும், அதன் தாக்கம் காரணமாக அரபிக் கடலில் புதிய புயல் சின்னமாக வலுப்பெற்று வருகிறது.
இதனால், இன்று மேற்கு கரைகளில் பலத்த காற்று வீசும் எனவும், நாளைக்கு அது பாகிஸ்தானை நோக்கி நகர்ந்துவிடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
இதன் காரணமாக இன்று குஜராத்தின் பல்வேறு பகதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனவும் சவுராஷ்ட்ரா, கொங்கண் மண்டலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.