‘என் பெண்ணை விட்டுவிடு...’ - காதலன் மீது ஆசீட்டை ஊற்றி கொடூரக் கொலை - அதிர்ச்சி சம்பவம்

samugam-viral-news
By Nandhini Sep 30, 2021 02:27 AM GMT
Report

ஒரு காதலனை, காதலியின் உறவினர்கள் ஆசிட் ஊற்றி கொலை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்நத்வர் சுதிர் சைனி (22). பி.டெக் மாணவரான இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அழகான சுதிர் சைனி, அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணும் அவரின் அழகில் ஆசைப்பட்டு அவரை காதலித்துள்ளார். இது அப்பெண்ணின் உறவினர்களுக்கு தெரிய வந்துள்ளது.

அதனால் அவர்கள் அந்த சுதிரிடம் பலமுறை தங்களின் மகளை காதலிக்க கூடாது என்று எச்சரித்துள்ளனர். ஆனால் அந்த சுதிர் அதற்கு அஞ்சாமல் அந்த காதலியை சந்திக்க கடந்த வியாழக்கிழமை காதலி வர சொன்ன இடத்திற்கு சென்றார். அப்போது அவரை வழிமறித்த அப்பெண்ணின் உறவினர்கள் அவரை 16 இடத்தில் கத்தியால் குத்தினார்கள்.

பின்னர் அவரின் முகம் அடையாளம் தெரியாமலிருக்க அவரின் முகத்திலும் உடலிலும் ஆசிடை ஊற்றினார்கள். இதனால், அவரின் முகம் மற்றும் உடலின் பல பாகங்கள் தீயில் எரிந்து அடையாளம் தெரியாமல் சிதைந்தது. பிறகு சுதீரின் உறவினர்கள் கல்லூரிக்கு போன தங்களின் மகனை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தார்கள்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சுதீரின் பிணம் ஒரு இடத்தில் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைக்கப்பட்டு இருந்ததை கண்டுப்பிடித்தனர். இதனையடுத்து, காதல் விவகாரத்தில் அவரை கொலை செய்த காதலியின் உறவினர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.