சாலை வசதி இல்லை - பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் பிரவத்திற்காக கர்ப்பிணியை டோலி கட்டி அழைத்து சென்ற மக்கள்!
மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் நிறை மாத கர்ப்பிணியை காட்டாற்று வெள்ளத்தில் ஊர் மக்கள் டோலி கட்டி அழைத்து சென்ற வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திராவின் விஜயநகரம், விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் மலை கிராமங்கள் இருக்கின்றன. முறையான சாலை, போக்குவரத்து வசதி இல்லாத அந்த கிராமங்களில் இல்லை. இதனால், அங்கு வசிக்கும் கிராம மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு இடையே காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள்.
பிரசவம், அவசர சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தங்கள் கிராமங்களிலிருந்து எளிதில் வெளியூர்களுக்கு செல்ல இயலாத சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், வனப்பகுதி, மலை பகுதிகள் ஆகியவற்றில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறார்கள்.
விஜயநகரம் மாவட்டத்திலுள்ள பச்சிபெண்ட்ட கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் மழை வெள்ளம் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடும் காட்டாறு வழியாக அந்த பெண்ணை கிராமத்தினர், உறவினர்கள் ஆகியோர் டோலி கட்டி சுமார் 4 கிலோமீட்டர் தூக்கி சென்று ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் அவலத்தை சந்தித்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.