கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் அசைவின்றி மிதந்த நபர் - அதிர்ச்சியான சுற்றுலாப்பயணிகள்
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் ஒருவர் ரொம்ப நேரம் மிதந்த நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டி.
அவர் கொடைக்கானல் ஏரியில் நீந்திய இவர், நீண்டநேரமாக மிதந்தபடி இருந்தார். இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏரியில் யாரோ ஒருவரின் பிணம் மிதந்து வருகிறது என்று நினைத்து போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தார்கள்.
இதனையடுத்து, விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் படகில் சென்று பார்த்தார்கள். அப்போது தங்கபாண்டி மிதந்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, நீந்தியபடி கரைக்கு வந்த அவரை, தீயணைப்புத் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தார்கள்.
இந்நிலையில், தங்கபாண்டியை விசாரித்தபோது தான் ஒரு சிவனடியார் என்றும், தண்ணீரில் மிதந்தபடி ஆசனம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தங்கபாண்டி தண்ணீரில் மிதந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.