ஆண்மை உணர்ச்சி அதிகரிக்க... இரவில் தேவாங்குகளை கடத்தியவர்கள் அதிரடி கைது!
ஆண்மை உணர்ச்சி அதிகரிக்க, பில்லி,சூனியம் என்று மாந்திரீகம் செய்ய தேவாங்குகளை கடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். இரவில் இரை தேடும் சிறு பாலூட்டி விலங்குதான் தேவாங்கு, இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள காடுகளில் மரங்களுக்கு இடையே தேவாங்கு வாழ்ந்து வருகின்றது. இந்த விலங்கின் ஒவ்வொரு பாகமும் மருத்துவத்துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.
அதன் காரணமாகவே இந்த அரிய விலங்குகள் வேட்டையாடப்பட்டு வருகிறது. இதனால் இந்த விலங்கினம் அழியும் விளிம்பில் இருக்கிறது. தேவாங்கிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோயை போக்க உதவி செய்வதாக கூறப்படுகிறது. அதனால் தேவாங்குகள் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.
இந்தோனேசியா, தாய்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக விலை கொடுத்து இந்த தேவாங்குகள் வாங்கப்படுகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த சங்கரலிங்கபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஒரு சுமோ மடக்கி சோதனை நடத்தினார்கள். அப்போது, அதில் கூண்டில் ஐந்து தேவாங்குகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த 5 தேவாங்குகளையும் போலீசார் மீட்டார்கள்.
இதனையடுத்து, தேவாங்குகளை கடத்திய கனகராஜ், கொம்புத்துறை ஆகியோரை போலீசார் கைது செய்தார்கள். அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மீட்கப்பட்ட 5 தேவாங்குகளையும் விளாத்திகுளம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மருத்துவத்திற்காக கடத்திச் செல்லப்பட்டதா? விற்பனை செய்ய கடத்தி செல்லப்பட்டதா ? என்று போலீசார் விசாரித்த போது, மாந்திரீகம் செய்வதற்காக திண்டுக்கல் மாவட்டத்திற்கு கடத்திச் செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
பில்லி , சூனியம் என்று மாந்திரீகம் செய்ய தேவாங்குகளை கடத்தியதாக கூறியுள்ளனர். ஒரு நபரை மாந்திரீகத்தால் கொலை பண்ணுவதற்கும், தேவாங்கினை வைத்து பூஜை செய்து அதை நரபலி கொடுத்தால் நினைத்தது நடக்கும் என்று நம்பிக்கை உள்ளது. அதற்காகத்தான் தேவாங்குகளை கொண்டு சென்றோம்.
நரபலிக்கு பின்னர் உயிரிழந்த தேவாங்கினை ஆண்மை உணர்ச்சி அதிகரிக்க மருந்து செய்வதற்கு பயன்படுத்துவதாகவும் விசாரணையில் கூறி உள்ளனர். இதன் பிறகு, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மீட்கப்பட்ட 5 தேவாங்குகளை போலீசார் பத்திரமாக காட்டில் விட்டனர்.