பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!

samugam-viral-news
By Nandhini Sep 27, 2021 09:47 AM GMT
Report

தமிழ்நாட்டில் இன்று முதல் பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியுள்ளது. பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று முதல் அக்டோபர் 17ம் தேதி வரையில் 4 சுற்றுகளாக ஆன்லைன் மூலம் நடைபெறுகின்றன.

பொறியியல் படிப்பில் பிஇ, பிடெக் பாடப்பிரிவில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெற்றப்பட்டன.

இதில், 1,74,490 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு விண்ணப்பித்தனர். இருந்தாலும், 1,45,045 மாணவர்கள் மட்டுமே விண்ணப்ப கட்டணங்களை செலுத்தி இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து தகுதியான 1,39,033 மாணவர்களுக்கு தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

இவர்களில் பொதுப்பிரிவு மாணவர்கள் 1,36,973 பேருக்கான கலந்தாய்வு அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்திருக்கிறது. மேலும் 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறுகின்றன. கலந்தாய்விற்கான பணம் செலுத்துவதற்கு 2 நாட்களும், கல்லூரிகளை தேர்வு செய்ய 2 நாட்களும், தற்காலிக ஒதுக்கீட்டு உத்தரவினை உறுதி செய்ய 2 நாளும், இறுதி ஒதுக்கீட்டு உத்தரவினை உறுதி செய்ய ஒரு நாளும் ஒவ்வொரு சுற்றுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.

தரவரிசைப்பட்டியிலில் 1 முதல் 14,788 வரை பெற்றவர்களுக்கு இன்று முதல் அக்டோபர் 5 ந் தேதி வரையில் முதல் சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகின்றன. தரவரிசைப் பட்டியிலில் 14,789 முதல் 45,227 வரை பெற்றவர்களுக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் அக்டோபர் 9-ம் தேதி வரையில் 2-வது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகின்றன.

அதேபோல் தொழிற்கல்விப் பிரிவில் உள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வும் இன்று முதல் அக்டோபர் 5-ம் தேதி வரையில் நடைபெறும். அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வின் மூலம் 6,442 இடங்களை தேர்வு செய்திருக்கிறார்கள்.