‘பிரதமர் மோடி வந்தால்தான் நான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன்...’ - அடம்பிடிக்கும் கிராமவாசி - வைரல் வீடியோ

samugam-viral-news
By Nandhini Sep 27, 2021 04:47 AM GMT
Report

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், மத்தியபிரதேச மாநில அரசு, கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

அதனையடுத்து, கிராமம் கிராமமாக சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்து வருகின்றனர்.

மாநிலத்தில் அனைவருக்கும் முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போட்டு முடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், தார் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமமான கிக்கார்வாசுக்கு, ஒரு தடுப்பூசி போடும் சுகாதார குழுவினர் நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது, கிராமத்தினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுவிட்டனர். இந்நிலையில், ஒரே ஒரு கிராமவாசி மட்டும் தனது மனைவியுடன் தடுப்பூசி போடுவதற்கு மறுத்துவிட்டார்.

அப்போது அவரிடம், ‘யார் வந்தால் நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வீர்கள்?’ என்று சுகாதார குழுவினர் கேட்டனர். அதற்கு அந்த நபர் ஆரம்பத்தில், ‘ஒரு மூத்த அதிகாரி வந்தால் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’ என்றார். அப்போது, ‘துணைக் கோட்ட மாஜிஸ்திரேட்டு வந்தால் தடுப்பூசி போட்டுக்கொள்வீர்களா?’ என்று கேட்டனர். அப்போது, ‘துணைக் கோட்ட மாஜிஸ்திரேட்டிடம் சொல்லி பிரதமர் மோடியை வரச்சொல்லுங்கள். அவர் இங்கு வந்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’ என்று கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, அவரிடம் எவ்வளவோ வற்புறுத்திப் பேசியும் அவர், தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒப்புக்கொள்ள ஒத்துக்கவே இல்லை. இதனால், சுகாதார குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், அந்த கிராமவாசியை மீண்டும் அணுகி, அவரையும், அவரது மனைவியையும் தடுப்பூசி போடுக் கொள்ள சம்மதிக்க வைப்போம் என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

‘பிரதமர் மோடி வந்தால்தான் நான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன்...’ - அடம்பிடிக்கும் கிராமவாசி - வைரல் வீடியோ | Samugam Viral News

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12