பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அதிகாரபூர்வ தகவல்

samugam-viral-news
By Nandhini Sep 27, 2021 04:13 AM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடி தனது சொத்து மதிப்பு விபரங்களை, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அதன்படி, பிரதமர் மோடியின் தற்போதைய சொத்து மதிப்பு 3.07 கோடி ரூபாயாக இருக்கிறது. பிரதமர் மோடியின் தற்போதைய சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 2.85 கோடி ரூபாயாக இருந்தது.

இந்நிலையில், தற்போது 22 லட்ச ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த சொத்து மதிப்பு உயர்வுக்கு காரணம், குஜராத் மாநிலம் காந்தி நகரிலுள்ள எஸ்பிஐ வங்கியில் அவர் வைத்திருக்கும் வைப்புத் தொகை கடந்தாண்டு ரூ.1.6 கோடியில் இருந்து ரூ.1.86 கோடியாக அதிகரித்ததுதான்.

சமீபத்தில் சொத்து மதிப்பு தரவுகளின்படி, அவருடைய வங்கிக் கணக்கில் 1.5 லட்ச ரூபாயும், ரொக்க கையிருப்பாக 36,000 ரூபாயும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தை முதலீடு அல்லது மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யவில்லை; அவற்றிற்கு பதிலாக தேசிய சேமிப்பு திட்டத்தில் 8.93 லட்ச ரூபாயும், இன்சூரன்ஸ் பாலிசிகளில் 1.50 லட்ச ரூபாயும், எல் அண்ட் டி இன்பிரா பாண்ட்களிலும் முதலீடு செய்திருக்கிறார். இவருக்கு ரூ. 1.48 லட்சம் மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்கள் உள்ளன. அசையும் சொத்துக்களின் மதிப்பு 1.97 கோடி ரூபாயாக உள்ளது.

தனது பெயரில் எந்த வாகனமும் வைத்துக்கொள்ளவில்லை. எவரிடமும் எந்த கடனும் வாங்கவில்லை. காந்திநகரில் செக்டார்-1ல் 401/ஏ என்ற முகவரியில் வீட்டுமனை உள்ளது. இதிலும், 25 சதவீதம் மட்டுமே மோடிக்கு சொந்தமானதாகும். கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பின்னர், நிலம் வாங்குவதில் அவர் எந்த முதலீடும் செய்யவில்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அதிகாரபூர்வ தகவல் | Samugam Viral News