காலாவதியான சாக்லெட்டுகளை சாப்பிட்ட 3 பசுமாடுகள் பரிதாபமாக உயிரிந்தது - சோகத்தில் கிராமம்

samugam-viral-news
By Nandhini Sep 27, 2021 02:58 AM GMT
Report

 சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்ட காலாவதியான சாக்லெட்டுகளை சாப்பிட்ட 3 பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வீரக்கல்புதூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட குப்பை கிடங்கு பகுதியில் காலாவதியான சாக்லெட் மிட்டாய்களை மர்ம நபர்கள் சிலர் மூட்டை மூட்டையாக கொட்டிச் சென்றிருக்கிறார்கள்.

இவற்றை அந்த பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும், கால்நடைகள் காகிதத்தோடு தின்றதாக கூறப்படுகிறது. இதில் ஜீரண கோளாறு ஏற்பட்டு 3 பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

மேலும், ஒரு பசு மாடு, 8 ஆட்டுக்குட்டிகளுக்கும் உடலை நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவற்றிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காலாவதியான சாக்லெட்டுக்களை சாப்பிட்டு உயிரிழந்த கால்நடைகளை இழந்தவர்கள் கதறி அழுதனர்.

தகவல் அறிந்த மேட்டூர் தொகுதி எம்எல்ஏ சதாசிவம், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று குப்பை கிடங்கை ஆய்வு செய்தார். பின்னர், வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், ஊராட்சி நிர்வாகத்தினருடன் பசு மாடுகள் இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

காலாவதியான சாக்லெட்டுகளை சாப்பிட்ட 3 பசுமாடுகள் பரிதாபமாக உயிரிந்தது - சோகத்தில் கிராமம் | Samugam Viral News

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12