Monday, May 5, 2025

தெருநாய் மறைவிற்கு அஞ்சலி – 500 பேருக்கு அன்னதானம் - நெகிழ்ச்சி சம்பவம்!

samugam-viral-news
By Nandhini 4 years ago
Report

தெரு நாய்களை அடித்துக்கொல்வது எல்லா மாநிலங்களிலும் நடந்து வருகிறது. நாய்களுக்கு உணவில் விஷம் கலந்தது கொடுத்து கொலை செய்த சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஆனால், ஒடிசா மாநிலத்தில் ஒரு தெரு நாய் இறந்ததற்காக அதன் கருமாதி நாளில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கி உள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் பத்ரக் பகுதியில் அதிகமாக துரித உணவு கடைகள் இருக்கிறது. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த பகுதிக்கு ஒரு பெண் நாய்க்குட்டி வந்தது. அங்கிருந்த ஒரு கடை உரிமையாளர் பிஸ்வால் என்பவர், இந்த நாய்க்குட்டி சம்பி என்று பெயர் வைத்துள்ளார்.

அந்த நாய்க்கு என்று தனியாக ஒரு தட்டு வைத்து தினமும் பிரியாணி, பிஸ்கட், ரசகுலா, ரொட்டி உள்ளிட்ட வேலை கொடுத்து அன்பாக கவனித்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள மற்ற கடைக்காரர்களும் சம்பிக்கு தினந்தோறும் உணவு கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 31ம் தேதியன்று சம்பி திடீரென உயிரிழந்தது. இதனால் 13 ஆண்டுகளாக தங்களுடன் இருந்த சம்பி பிரிந்ததில் அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

சம்பி இறந்த 16வது நாளில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கி உள்ளனர். அன்னதான நிகழ்வின்போது சம்பிக்கு பேனர் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர். இறந்த தெரு நாய் இறந்ததற்காக 500 பேருக்கு அன்னதானம் செய்த நிகழ்வு அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

தெருநாய் மறைவிற்கு அஞ்சலி – 500 பேருக்கு அன்னதானம் - நெகிழ்ச்சி சம்பவம்! | Samugam Viral News