‘தலித் மக்களுக்கு அனுமதி இல்லை... பார்சல் தான்’ – ஓனர் மீது வழக்கு! ஹோட்டலுக்கு அதிரடி சீல்

samugam-viral-news
By Nandhini Sep 26, 2021 06:59 AM GMT
Report

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் தின்டகூரு என்ற கிராமம் உள்ளது. அங்கு மாதே கவுடா என்பவர் ஹோட்டல் நட‌த்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 15ம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது நண்பர்களுடன் மாதே கவுடாவின் ஹோட்டலுக்கு வந்தார்.

அப்போது மாதே கவுடா ஹோட்டலில் தலித்களுக்கு அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை; பார்சல் வாங்கிட்டு போகுமாறு சொல்லி அவமானப்படுத்தி இருக்கிறார்.

இது குறித்து சந்தோஷ் ஹாசன் கலெக்டரிடம் புகார் கொடுத்தார். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஹாசன் மாவட்ட பீம் ஆர்மி அமைப்பின் செயலாளர் நடராஜ் தலைமையில் தலித் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சென்னராயப்பட்டணா வட்டாட்சியர் ஜே.பி.மாருதி விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து, ஹோட்டலுக்குச் சீல் வைக்கப்பட்டது. மேலும் உரிமையாளர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழ‌க்கு பதிவு செய்து விசாரிக்க போலீசாருக்கு வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

‘தலித் மக்களுக்கு அனுமதி இல்லை... பார்சல் தான்’ – ஓனர் மீது வழக்கு! ஹோட்டலுக்கு அதிரடி சீல் | Samugam Viral News