பெண் போலீசை 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம்

30 வயது பெண் போலீஸ் கான்ஸ்டபிள் 3 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் போலீஸ் ஒருவர் பணிபுரிந்து வந்தார். அவர் சமுக ஊடகத்தில் ஒரு ஆண் நண்பரோடு அடிக்கடி பேசி வந்தார் .

அந்த நண்பரும், போலீஸ் பெண்ணுடன் பேஸ்புக்கில் நட்பாக பழகி வந்துள்ளார். பிறகு அவர் தனது தம்பியின் பிறந்தநாள் விழாவிற்கு அந்த பெண் போலீசை அழைத்துள்ளார்.

அங்கு வந்த அந்த பெண் போலீசை 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பலாத்கார சம்பவத்தை 3 பேரும் படம்பிடித்ததாக அப்பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்