Friday, May 2, 2025

விஷமாக மாறிய தண்ணீர் - 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு

samugam-viral-news
By Nandhini 4 years ago
Report

உளுந்தூர்பேட்டை அருகே யூரியா கலந்த தண்ணீரை குடித்த 17 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உளுந்தூர்பேட்டை அருகே நன்னாவரம் கிராமத்தை சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளர்கள், அதே கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

தண்ணீர் தாகம் எடுத்ததால் அனைவரும் அங்கு உள்ள விவசாய நிலத்தில் சென்று தண்ணீரை குடித்தனர். அந்தத் தண்ணீரில் யூரியா கலந்திருந்ததை தெரிந்ததையடுத்து, அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

பின்னர் தண்ணீர் குடித்த 17 விவசாய கூலி தொழிலாளர்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் நன்னாவரம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

விஷமாக மாறிய தண்ணீர் - 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு | Samugam Viral News

விஷமாக மாறிய தண்ணீர் - 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு | Samugam Viral News