Wednesday, Apr 30, 2025

குளிக்கும் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த காமூகன் - மிரட்டி பணம் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம்

samugam-viral-news
By Nandhini 4 years ago
Report

குளிக்கும் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்து, அப்பெண்களை மிரட்டி பணம் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா (25). இவர் எம்.ஏ படித்திருக்கிறார். இவர் பிரபல அரசியல் கட்சி ஒன்றில் மாணவர் அணி நிர்வாகியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் அப்பகுதியில் குளம் மற்றும் ஏரிகளில் குளிக்கும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்து வருவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார். பெண்களிடம் தன்னை ஒரு நல்லவன் போல் காட்டிக் கொள்ளும், இவர் குளிக்க வரும் பெண்களிடம் எவ்வளவு நேரம் குளிப்பீர்கள் என்று கேட்டுவிட்டு, அங்கு ஒரு அழுக்கு துணி வைப்பது போல், அதன் உள்ளே செல்போனை வைத்து படம் பிடித்து வந்துள்ளான்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கூறுகையில், இதற்காகவே அவர் தனி வயர் கூடை ஒன்றை வைத்துள்ளார். அதன் பின் குளிக்க வரும் பெண்களிடம் நீங்கள் எல்லாம் ஏன் இவ்வளவு நேரம் குளிக்கிறேங்க, சீக்கிரம் கிளம்புங்க நான் குளிக்கனும் என்று சொல்லிவிட்டு, அந்த கூடையை அங்கே வைத்துவிட்டு சென்றுவிடுவான்.

இதனையடுத்து, அந்த பெண்கள் சென்ற பின்பு, குறித்த மொபைல் போனை எடுத்து பார்த்து வந்திருக்கிறான். அந்த வீடியோவை வைத்து குறித்த பெண்களிடம் பாரதிராஜா பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளான். அப்படி அவர்கள் பணம் தரமுடியாது என்று சொன்னால், உடனே இந்த வீடியோக்களை எல்லாம் சமூகவலைத்தளங்களில் போட்டுவிடுவேன் என்று மிரட்டி வந்திருக்கிறான்.

இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவன் செல்போனில் 13 பெண்களின் வீடியோக்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பல பெண்களை வீடியோக்களை காட்டி பாலியல் வன்கொடுமையும் செய்து வந்துள்ளான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அவனுடைய வங்கி கணக்கில் தற்போது 3 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் இருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர். இது எல்லாம் பெண்களின் பணம் தான், இதை எல்லாம் மிரட்டி வாங்கி வந்துள்ளான். தற்போது அவன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

குளிக்கும் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த காமூகன் - மிரட்டி பணம் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் | Samugam Viral News