மூதாட்டியை கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்ட 19 வயது சைக்கோ இளைஞன்! அதிர்ச்சி சம்பவம்
ராஜஸ்தான் மாநிலத்தில் மூதாட்டியை கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்ட 19 வயது சைக்கோ இளைஞனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஹனுமன்கர் என்ற பகுதியில் மூதாட்டி ஒருவர் தனியாக வாழ்ந்து வந்தார். கணவனை இழந்த அந்த மூதாட்டிக்கு 60 வயதாகும். அவரின் வீட்டுக்குள் நுழைந்த 19 வயது இளைஞர் அவரை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சி செய்துள்ளார். அதற்கு அந்த மூதாட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அந்த சைக்கோ இளைஞன் அந்த மூதாட்டியை கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அவரின் சடலத்தோடு உடலுறவு கொண்டு தனது இச்சையை தீர்த்துக் கொண்டிருக்கிறார். மூதாட்டி வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது மூதாட்டி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். பிரேத பரிசோதனையில் மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, குற்றவாளியை கண்டுபிடித்து போலீசார் கைது செய்துள்ளனர். மூதாட்டி கொலை செய்யப்பட்டு, சடலத்துடன் உடலுறவு கொண்ட இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.