காதலிக்க மறுத்த +2 மாணவி மீது சராமரியாக தாக்குதல் - இளைஞன் வெறிச்செயலால் பரபரப்பு!
காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் +2 மாணவி மீது இளைஞர் சராமரி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி, இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12 வகுப்பு படித்து வருகிறார். அவரை காதலிப்பதாக கூறி சந்துரு (21) என்ற வாலிபர் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். தினமும் அந்த மாணவியை பின் தொடர்ந்து அவரை காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால் அந்த மாணவி அவனின் காதலை ஏற்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது வீட்டிற்கும் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். இந்நிலையில், வழக்கம் போல மாணவி பள்ளி முடித்து வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தார். அவர் தனியே வருவதை அறிந்த சந்துரு அந்த மாணவியை வழிமறித்து அவரை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார்.
இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவிக்கவே, அந்த இளைஞர் ஆத்திரமடைந்துள்ளார். கோபத்தில் அவன் அந்த மாணவியை சராமரியாக தாக்கியுள்ளான். அப்போது அந்த மாணவி சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர்.
இதனால் அவன் பயந்து தப்பி ஓடியுள்ளான். இதனையடுத்து, வீட்டிற்கு வந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். பெற்றோர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரை அடுத்து சந்துரு மீது வழக்குபதிவு செய்து அவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.