கள்ளக்காதலை கைவிட மறுப்பு - ஆத்திரத்தில் அக்காவின் கழுத்தை நெரித்து கொலை செய்த தம்பி!
திருவண்ணாமலை அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் அக்காவையே தம்பி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்நிலையில், ராஜேஸ்வரிக்கு, அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து கணவன் -மனைவிக்கு இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் வெங்கடேஷ் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார். இதனையடுத்து அவர் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி ராஜேஸ்வரி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செயது, விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், ராஜேஸ்வரியை கொலை செய்ததாக கூறி, அவரது தம்பி பிரபாகரன் நேற்று அப்துல்லாபுரம் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்துள்ளார். தொடர்ந்து, தூசி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, ராஜேஸ்வரியிடம் கள்ளத்தொடர்பை கைவிடும்படி பலமுறை எச்சரித்து வந்தேன். அவர் கேட்பதாக இல்லை. அதனால், ஆத்திரத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வரை கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். இதனையடுத்து, பிரபாகரனை கைது செய்த போலீசார், அவரை வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.