3 வயது மகனை கொடூரமாக அடிக்கும் தந்தை: ரசித்து பார்த்த மனைவி - அதிர்ச்சி வீடியோ
முதல் மனைவிக்கு பிறந்த 3 வயது சிறுவனை 2-வது மனைவி கண் முன்னே கணவன் தாக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் நகராட்சி அலுவலகத்தில் டிராக்டர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி இறந்து விட்டார்.
இந்நிலையில், இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து, முதல் மனைவிக்கு இவருக்கும் பிறந்த 3 வயது சிறுவனை பெற்ற தந்தையே துன்புறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
தனது இரண்டாவது மனைவியுடன் சிறுவனுக்கு உணவு அளித்துக் கொண்டே சிறுவனை கடுமையாக பெற்ற தந்தையை தாக்கிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், அந்த வீடியோவில் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தையை தந்தை அடிப்பதை கவனிக்கும் இரண்டாவது மனைவி, அடிப்பதை தடுக்கவோ கண்டிக்கவோ செய்யாமல் ரசித்து கொண்டிருக்கிறார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் இவர்கள் இருவர் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.