ஓடும் ரயிலிலிருந்து குழந்தையுடன் தவறி விழுந்து விபத்தில் சிக்கிய பெண்: அதிர்ச்சி வீடியோ வைரல்

samugam-viral-news
By Nandhini Sep 22, 2021 04:55 AM GMT
Report

கையில் குந்தையுடன் ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயற்சி செய்த பெண் தவறி விழுந்து ரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேசம் மாநிலம் சர்பார்க் ரயில் நிலையத்தில் கழிவறைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த ரயிலில் குழந்தையுடன் ஏறிய பெண், மீண்டும் கீழே இறங்குவதற்குள் ரயில் புறப்பட்டு சென்றது.

இதனையடுத்து, பதற்றமடைந்த பெண், இறங்க முற்பட்டபோது கால் தவறி கீழே விழுந்து நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையேயான சிறிய இடைவெளியில் சிக்கிக்கொண்டார்.

இதயைடுத்து, அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு போலீசார், உடனே செயினை இழுத்து ரயிலை நிறுத்தி தாயையும், சேயையும் பத்திரமாக மீட்டார்கள். இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. தாயையும், குழந்தையும் காப்பாற்றிய பாதுகாப்பு போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.