வரதட்சணை கேட்டு கொடூரமாக தாக்கிய கணவன் - பரிதாபமாக உயிரிழந்த மனைவி! அதிர்ச்சி வீடியோ

samugam-viral-news
By Nandhini Sep 22, 2021 03:13 AM GMT
Report

வரதட்சணைக் கேட்டு கணவரும், அவரது குடும்பத்தினரும் கொடூரமாக தாக்கியதில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புலந்த்சாகர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹசீம் என்பவர் தனது மனைவியை உறவினர்கள் முன்னிலையில் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பலரும் இந்த சம்பவம் எங்கே நிகழ்ந்துள்ளது என்றும், போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், அந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

அன்றைக்கும் கடுமையாக தாக்கியதில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன் பின்னரும் சம்பந்தப்பட்ட கொலையாளிகளை போலீசார் கைது செய்யவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றம்சாட்டி உள்ளார். முதல் மனைவியை விவகாரத்து செய்வதாக கூறி கடந்த மாதம் எனது சகோதரியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் வரதட்சணை கேட்டு தொடர்ந்து அவரை டார்ச்சர் செய்து வந்தார்.

இந்நிலையில்தான் அவரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து என் சகோதரியை அடித்தே கொலை செய்துள்ளனர். இதுபோன்ற கொடூரம் எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது. என் சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் சிந்தியுள்ளார் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி.

பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை மற்றும் வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்ததும் ஹசீம் தலைமறைவாக இருக்கிறார். அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.