ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி - ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு குரு தர்ஷினி (6), தேவ தர்ஷினி (1) என்ற 2 மகள்களும் உள்ளனர். குமார் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். அங்கு ரூ.10 லட்சம் ஒத்திக்கு வீடு எடுத்து, மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்ததால் அந்த வீட்டை காலி செய்துவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பினார்கள். இதனையடுத்து, வீட்டின் உரிமையாளர், குமாரிடம் பெற்ற ரூ.10 லட்சத்தை திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். அவருக்கு மனைவி தேவி ஆறுதல் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில், வாழ்வில் விரக்தியடைந்த குமார், நேற்று முன்தினம் இரவு மனைவி மற்றும் தனது இரு குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்து விட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
நேற்று காலை நீண்ட நேரமாக அவர்கள் வீடு திறக்காமல் இந்ததால் அக்கம் பக்கதினர் சென்று பார்த்தபோது, அவர்கள் விஷம் குடித்திருந்தது தெரிய வந்தது. உடனே, 4 பேரையும் மீட்டு ராஜாபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக 4 பேரும், நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு. அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் உரிமையாளர் பணம் தராததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil
