கடைசியா ஒரு கேள்வி கேட்கிறேன்? வாக்கிங் போன முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மறித்த பெண் - சுவாரசிய சம்பவம்

samugam-viral-news
By Nandhini Sep 21, 2021 05:40 AM GMT
Report

முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது அவரிடம் மக்கள் பலர் இயல்பாக உரையாடல் நிகழ்த்தினார்கள். முதல்வரிடம் பல சுவாரசியமான கேள்விகளை கேட்க, அதற்கு முதல்வரும் இயல்பாக பதில் சொன்ன விதம் பலரையும் கவர்ந்துள்ளது.

இன்று சென்னை தியோசபிக்கல் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் சென்றிருந்தார்.

பீச் நிற பனியன் அணிந்து கொண்டு பெரிய பாதுகாப்பு இல்லாமல், இயல்பாக காலையில் வாக்கிங் சென்றார் முதல்வர். அவரிடம் அங்கு இருந்த பலர் அடிக்கடி வந்து பேசினார்கள். தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பலர் உங்கள் ஆட்சி நன்றாக உள்ளது சார் என்றெல்லாம் குறிப்பிட்டனர். இன்னும் சிலர் தங்களின் கோரிக்கைகளை வைத்தனர்.

அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நேரம் கொடுத்து, நடந்தபடியே பதில் அளித்தார். அங்கு நடை பயிற்சி மேற்கொள்ள வந்தவர்களுடன் ஸ்டாலின் இயல்பாக உரையாடினார். முதல்வர் ஸ்டாலினை பார்த்ததும் அங்கு வந்த பெண் ஒருவர், சார் இரு வருடங்களுக்கு முன்னர் விமான நிலையத்தில் உங்களை சந்தித்தேன். உங்களோடு அப்போது செல்பி எடுக்க முடியவில்லை.

நீங்கள் தேர்தலில் வென்றுவிட்டீர்கள். நீங்க ஆட்சிக்கு வந்தது ரொம்ப மகிழ்ச்சி. உங்கள் ஆட்சி சிறப்பாக உள்ளது. நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்" என்று கூறினார். பின்னர் அந்த பெண்மணி, "கடைசியா ஒன்று கேட்கிறேன் சார், எப்படி சார் இளமையாகவே இருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று கூறினார்.

இதை கேட்டதும் அங்கிருந்தவர்கள் கலகலவென சிரித்து விட்டார்கள். ஸ்பெயின் சென்றுள்ள உங்கள் பேரன் நன்றாக ஆடுவார் என்று நம்புகிறோம். அவர் வெற்றியுடன் திரும்ப வேண்டும். அவர் பயிற்சி எடுக்கும் போது நாங்கள் அவரை பார்த்திருக்கிறோம் என்று அங்கிருந்தவர்கள் கூறி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து தெரிவித்தார்கள்.

கடைசியா ஒரு கேள்வி கேட்கிறேன்? வாக்கிங் போன முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மறித்த பெண் - சுவாரசிய சம்பவம் | Samugam Viral News