தீக்குளித்து சாலையில் ஓடிய நபர்; நெஞ்சை பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்! நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (38). இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய முதல் மனைவியை பிரிந்து துர்க்கை அம்மாள் என்ற பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்தார்.
இதனையடுத்து, இவர்கள் இருவரும் ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், உடல் முழுக்க தீப்பற்றி எரிந்து கொண்டு மாணிக்கம் வீதியில் ஓடி வந்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணிக்கத்திற்கு 90% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மாணிக்கம் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வார காலமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மாணிக்கம் தானே தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது கள்ளக்காதலி மாணிக்கத்தின் மீது தீ வைத்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 12ம் தேதி மாணிக்கம் வீதியில் உடல் எரிந்த நிலையில் ஓடி வந்த காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.