மாற்று சாதி பெண்ணை திருமணம் செய்த இளைஞர் - கடத்தி சென்று சிறுநீர் குடிக்கச் சொல்லி சித்ரவதை செய்த கொடூரக் கும்பல்

samugam-viral-news
By Nandhini Sep 20, 2021 04:17 AM GMT
Report

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞரின் உறவினர்கள் மூன்று பேரைக் கடத்தி சென்று சிறுநீர் குடிக்கச் சொல்லி, அடித்துத் துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் ரமேஷ் (19). இவர் டிப்ளமோ படித்து வந்துள்ளார். ரமேஷிற்கும், அதே பகுதியில் வேறு சமூகத்தைச் சேர்ந்த 21 வயது பி.காம் பட்டதாரி இளம் பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறார். ஆனால் இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனையடுத்து, கடந்த 10-ம் தேதி காதல் ஜோடி இருவரும் திருமணம் செய்து கொள்ள ஊரை விட்டு ஓடியுள்ளனர். இது அப்பெண்ணின் பெற்றோருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனையடுத்து, அந்த இளம்பெண்ணின் உறவினர்கள் மாரண்ட அள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். கடந்த 12ம் தேதி இளம்பெண்ணின் உறவினர்கள் சிலர், ரமேஷின் உறவினர்கள் 3 பேரையும் காரில் கடத்தி சென்று, ''உங்களுக்கு உயர் சாதி பொண்ணு கேட்குதா'' என அவர்களை அடித்து உதைத்துள்ளனர். பின்னர், அவர்களுக்கு மது குடிக்க வைத்தும், முகத்தில் சிறுநீர் கழித்தும் துன்புறுத்தி இருக்கிறார்கள்.

அதுமட்டும் இல்லாமல் ரமேஷ், மோகனா இருக்கும் இடத்தை சொல்லச் சொல்லிச் செருப்பால் அடித்து உச்சக்கட்ட கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். அப்போது ஒருவர் தப்பி ஓடி வந்துள்ளார். மேலும் சிறுநீர் குடிக்கச் சொல்லி 2 பேரையும் அந்த கும்பல் அடித்து உதைத்ததால் அவர்கள் இருவரும் கூச்சல் போட்டிருக்கிறார்கள். இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டுள்ளனர்.

காயமடைந்த 2 பேரையும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பாலக்கோடு டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதனால், காவல்துறையினர் ரமேஷின் உறவினர்கள் 3 பேர் மீதும், மோகனாவின் உறவினர்கள் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சிறுநீர் குடிக்கச் சொல்லித் துன்புறுத்தியதாக மோகனாவின் உறவினர்கள் வீரமணி, ஆனந்தன், முரளி உள்ளிட்ட மேலும் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.     

மாற்று சாதி பெண்ணை திருமணம் செய்த இளைஞர் - கடத்தி சென்று சிறுநீர் குடிக்கச் சொல்லி சித்ரவதை செய்த கொடூரக் கும்பல் | Samugam Viral News

மாற்று சாதி பெண்ணை திருமணம் செய்த இளைஞர் - கடத்தி சென்று சிறுநீர் குடிக்கச் சொல்லி சித்ரவதை செய்த கொடூரக் கும்பல் | Samugam Viral News