பானிபூரியில் புழு – வடமாநிலத்தவரை கட்டி வைத்து அடித்து உதைத்த மக்கள்!
சென்னை அம்பத்தூர், பட்டரவாக்கம் ‘நாம் தமிழர்’ கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் பிரிவினர் மற்றும் தொண்டர்கள் பானி பூரி சாப்பிட முடிவெடுத்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கிருந்த வடமாநிலத்தவரிடம் பானி பூரி வாங்கியுள்ளனர். பசி காரணமாக இளைஞர்களே உருளைக்கிழங்கை எடுத்து பூரியில் வைத்து உண்ண ஆரம்பித்திருக்கிறார்கள்.
அப்போது உருளைக் கிழங்கிலிருந்து துர்நாற்றம் வீசி இருக்கிறது. அந்த உருளைக்கிழங்கைப் பார்த்தபோது, கெட்டுப் போனது தெரியவந்தது. மேலும் அது கெட்டுப்போகாமல் இருக்க மீண்டும் மீண்டும் சூடு செய்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அப்பகுதி மக்கள் பானிபூரி விற்பனை செய்து வந்த வட மாநிலத்தவரை அங்கிருந்த கம்பியில் கட்டி வைத்து அடித்து உதைத்தார்கள்.
ஆனால், இதற்கு தான் முதலாளி இல்லை. ஒரே அறையில் தங்கி பானி பூரியை தயார் செய்து இதுபோன்று 15க்கும் மேற்பட்டோர் விற்பனை செய்து வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார். அத்துடன் உருளைக்கிழங்கு மற்றும் பானி பூரியை தரையில் கொட்டிய பொதுமக்கள் அந்த இளைஞரை துரத்தியடித்தார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.