10 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு - சத்தீஸ்கரில் பரபரப்பு
தம்தாரி பகுதியில் 10 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டை பாதுகாப்பு படையினர் கண்டெடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சட்டீஸ்கரில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் கொண்ட பகுதிகள் அதிகளவில் இருக்கின்றன. அவர்களை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கொரோனா காலத்தில் நக்சலைட்டுகளை சரணடையும்படியும் வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில், சத்தீஷ்காரின் தம்தாரி என்ற பகுதியில் நக்சலைட்டுகள் சிலர் 10 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வைத்து விட்டு சென்றிருக்கிறார்கள்.
இதனை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். அதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு செயலிழக்க செய்தார்கள். மக்கள் கூடும் பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.