10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - தட்டிக்கேட்ட பெற்றோரை மிரட்டிய நபர் கைது!
திருவண்ணாமலை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததுடன், அவரது பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் எரும்பூண்டி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் ஒரு விவசாயி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே வசித்து வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளாள். சிறுமியின் பெற்றோர் சிவகுமாரிடம் கேட்டிருக்கிறார்கள்.
அப்போது, அவர்களை அவதூறாக பேசி, சிவகுமார் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் போலீசார் சிவகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.