கொடூரமாக தாக்கும் புதிய வகை டெங்கு… இந்த அறிகுறிகள் இருந்தா உடனே மருத்துவமனைக்கு செல்லுங்கள் - மத்திய அரசு எச்சரிக்கை
இந்தியாவை உலுக்கி எடுத்த கொரோனா 2ம் அலை தற்போது தான் ஓய்ந்துள்ளது. இருந்தாலும், மூன்றாம் அலைக்கான பரவல் ஆங்கங்கே லேசாக பரவி வருகிறது. இதனால், அனைவரும் கண்டிப்புடன் கொரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில், டெங்கு எட்டிப் பார்த்து அச்சுறுத்த ஆரம்பித்தள்ளது. டெங்குவை விரைந்து கவனிக்காமல் விட்டால் உயிரைக் குடிக்கக் கூடிய கொடிய காய்ச்சலாக மாறிவிடும். இந்நிலையில், தற்போது பெரும் ஆபத்துகளை விளைவிக்கும் புதிய வகை டெங்கு பரவி வருவதாக மத்திய அரசு எச்சரித்திருக்கிறது.
செரோடைப் – 2 என்ற வகையிலான டெங்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களிலும் ஒரு சில வடமாநிலங்களிலும் பரவிக் கொண்டு வருகிறது. இவ்வகை டெங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டவையாக இருக்கும். சாதாரண டெங்குவை விட அதிகளவு உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடியதாம்.
ஆகவே இவ்வகை டெங்கு வைரஸ் பரவலை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் 11 மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தி இருக்கிறார்.
கீழ்கண்ட அறிகுறிகள் தெரிந்தவுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லுமாறு மக்களுக்கும் அறிவுறுத்தி இருக்கிறார்.
இதன் அறிகுறிகள்:
1. அடிவயிற்றில் வலி
2. வாந்தி அல்லது மலத்தில் இரத்தம்
3. குமட்டல், வாந்தி (1 நாளில் குறைந்தது 3 முறை)
4. கண்கள், தசைகள், எலும்பு மூட்டு வலி
5. சோர்வடைந்த, அமைதியற்ற அல்லது எரிச்சலூட்டும்
6. மூக்கு அல்லது ஈறுகளில் இருந்து ரத்தப்போக்கு