நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து குடி, கும்மாளம்: தட்டிக் கேட்ட மனைவியை நண்பனோடு கணவன் சேர்ந்து தாக்கிய வீடியோ
வாள்வச்சகோஷ்டம் பகுதியில் மனைவி, 3 பெண் குழந்தைகளின் முன்னிலையில் நண்பர்களை அழைத்து மது விருந்து நடத்திய கணவரை தட்டிக் கேட்ட மனைவியை தாக்கிய காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் வாள்வச்சகோஷ்டம் பகுதியை சேர்ந்தவர் கிரிஜா. இவர் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு 3 பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். கணவன் அனீஸ். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில், நேற்று அனீஸ் தனது நண்பர்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்து மது விருந்து கொடுத்துள்ளார். மது விருந்து நடக்கும் நேரத்தில் கிரிஜா மற்றும் அவரது 3 பெண் பிள்ளைகளும் செல்போனில் வீடியோ எடுத்தனர்.
இதனால், கோபமடைந்த நண்பர்களில் ஒரு நபர் கிரிஜாவை தாக்கியுள்ளார். இதனையடுத்து, கிரிஜாவின் கணவன் அனீசும் தனது மனைவி என்று பாராமல் மதுபோதையில் கிரிஜாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்தக் காட்சிகளை அங்கிருந்த கிரிஜாவின் மகள்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.