ஒரே மாவட்டத்தில் 130 குழந்தைகள் திடீர் மருத்துவமனையில் அனுமதி: பேரதிர்ச்சியில் மக்கள்!

samugam-viral-news
By Nandhini Sep 14, 2021 09:51 AM GMT
Report

ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக 130 குழந்தைகள் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று குழந்தைகளை பாதிப்பது திடீரென அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். எனவே, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

2021 மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இந்தியாவில் குழந்தைகளை தொற்று தாக்குவது திடீரென அதிகரித்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் தொற்று பாதிப்பு 2.80 சதவீதத்திலிருந்து 7.04 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. தொற்று பாதிப்புக்குள்ளாகும் 100 பேரில் 7 பேர் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாக இருப்பதாக எச்சரித்திருக்கிறது.

இந்நிலையில், மேற்குவங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல பாதிப்புகளுடன் 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 2 குழந்தைகளின் நிலைமை மிக கவலைக்கிடமாக உள்ளதால் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

நாட்டில் கொரோனாவின் 3வது அலை பாதிப்பு குழந்தைகளை அதிகம் பாதிக்கக்கூடும் என வல்லுநர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.   

ஒரே மாவட்டத்தில் 130 குழந்தைகள் திடீர் மருத்துவமனையில் அனுமதி: பேரதிர்ச்சியில் மக்கள்! | Samugam Viral News