மக்களை மகிழ்விக்க நடனம் ஆடிய இளைஞர் - சட்டென கீழே விழுந்து உயிரிழந்தால் மக்கள் அதிர்ச்சி!
ஆந்திர மாநிலம், அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள கௌதமபுரி கிராமத்தில் நேற்று இரவு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த கிராமத்தைச் சேர்ந்த குள்ளயப்பா ( 25) என்பவர் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார். அப்போது, தெலுங்கு படப் பாடல் ஒன்றுக்கு மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, நடனம் ஆடிக் கொண்டிருக்கும்போது, அப்படியே கீழே விழுந்தவர் உயிரிழந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை தூக்கி கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். விநாயகர் சதுர்த்தி விழாவில் கிராம மக்களை மகிழ்விக்க நடனம் ஆடிய இளைஞர் நிகழ்ச்சியில் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.