பெண் போலீசிடம் உடைகளை கழற்றி நிர்வாணமாக கலாட்டா செய்த ஆசாமியால் பரபரப்பு! அடுத்து நடந்தது என்ன?
குஜராத்தின் சூரத்தில் உள்ள சலாபத்புரா பகுதியில் உள்ள தலோதரா கிராமம் உள்ளத. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் நந்த்வானி என்ற 55 வயதான நபர் பொது இடத்தில் குடித்து விட்டு தகராறு செய்துள்ளார்.
இதனால் அவரை அந்த பகுதியில் ரோந்து வந்த போலீசார் அவரை கண்டித்துள்ளனர். ஆனால், அவர் அந்த காவல் துறையினரிடம் கலாட்டா செய்துள்ளார். அதனால் போலீசார் அவரை கைது செய்து, சலாபத்புரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் லாக்கப்பில் வைத்தார்கள். அப்போது, அந்த நபர் லாக் அப்பிலும் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவரை அடக்குவதற்காக சில பெண் போலீசார் வந்தார்கள். அப்போது அந்த நபர் யாரும் எதிர்பார்க்காத நிலையில், தன்னுடைய உடைகளை களைந்து விட்டு அவர்கள் முன்பு நிர்வாணமாக நின்று கலாட்டா செய்துள்ளார். இதை சற்றும் எதிர் பார்க்காத அந்த பெண் போலீசார் அவரிடம் ஆடைகளை கொடுத்து அணிய சொல்லியுள்ளனர்.
ஆனால், அந்த நபர் அணியாமல் மீண்டும் மீண்டும் லாக் அப்புக்குள் கலாட்டா செய்துள்ளார். இதனையடுத்து, அந்த பெண் போலீசை ஆபாசமாகயும் திட்டிக் கொண்டிருந்தார். இதனால் அங்கு வந்த போலீஸ் உயரதிகாரிகள் அவரை அடித்து உதைத்து லாக்கப்பில் உடையணிந்து பூட்டி வைத்தார்கள். பிறகு போலீசார் அவர் மீது பாலியல் கொடுமை வழக்கை பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.