ஓடும் வேனுக்குள் பாலியல் வன்கொடுமை செய்து தூக்கி வீசப்பட்ட பெண் - 33 மணி போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்தார்

By Nandhini Sep 12, 2021 06:34 AM GMT
Report

டெம்போ வேனுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு சாலையில் தூக்கி விசப்பட்ட பெண் 33 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பரிதாபமாக உயிரிழந்தார்.

டெல்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்த அதே கொடுமை மும்பையிலும் இந்த பெண்ணிற்கு நடந்துள்ளது. வாகனத்தில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்த பின்னர் இரும்பு கம்பியால் அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பை சேதப்படுத்தியுள்ளான் இந்த காமக்கொடூரன்.

மும்பை கைராணி சாலையில் நிர்வாண கோலத்தில் ஒரு இளம்பெண்ணை டெம்போ வேனிலிருந்து தூக்கி வீசிவிட்டு செல்கிறார் ஆண் ஒருவன் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இளம்பெண் ரத்தவெள்ளத்தில் கிடந்ததை பார்த்தனர். உடனே, அவரை மீட்டு ராஜா வாடி அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர்.

மருத்துவமனையில் பெண்ணை பரிசோதனை மருத்துவர்கள், அப்பெண்ணுக்கு 34 வயது என்றும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கிறார் என்றும், இரும்பு கம்பியால் அவரது பிறப்புறுப்பு சேதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்கள். இந்தக் குற்றத்தை செய்த குற்றவாளியை போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விரைந்து தேடினார்கள்.

தீவிர தேடுதலில் மோகன் சவுகான் (42) என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவன் மீது கொலை முயற்சி வழக்கு பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது அவன் பயன்படுத்திய டெம்போவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வேனில் ரத்த கரைகள் இன்னும் இருக்கின்றன. தடயவியல் நிபுணர்கள் அந்த வேனை ஆய்வு செய்து வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட அந்த பெண் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 33 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மும்பையில் நடந்த இந்த கொடூரம் சம்பவம் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு விரைவாக விசாரிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்குமென்று உறுதி அளித்துள்ளார் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே.