கலைஞரின் மூத்த மகள் செல்வி பேத்தி திருமணம்: குடும்பத்துடன் பங்கேற்று வாழ்த்திய ஸ்டாலின்
மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அரசியலில் மிகப் பெரிய ஆளுமை திறமை கொண்டவராக திகழ்ந்தார்.
50 ஆண்டுகால அரசியல் வரலாறு, 5 முறை முதல்வர் என பல சிறப்புகளைக் கொண்ட கருணாநிதி தனது 94ம் வயதில் உயிரிழந்தார். இந்நிலையில், கருணாநிதியின் மகள் செல்வி – செல்வம் தம்பதியின் பேத்தி ஓவியா – சந்தீப் ஆகியோருக்கு திருமணம் நடந்துள்ளது.
இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் – துர்கா ஸ்டாலின் ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதுகுறித்து திமுக எம்எல்ஏவும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில், செல்வி அத்தை – செல்வம் மாமா அவர்களின் பேத்தி ஓவியா – சந்தீப் இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உட்பட குடும்பத்தாருடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம். நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
செல்வி அத்தை - செல்வம் மாமா அவர்களின் பேத்தி ஓவியா - சந்தீப் இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் உட்பட குடும்பத்தாருடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம். நன்றி. pic.twitter.com/eEyGtRJpRK
— Udhay (@Udhaystalin) September 10, 2021