விற்பனைக்கு இருந்த விநாயகர் சிலைகளை வண்டியில் ஏறிச்சென்ற போலீசார் - வீடியோ வைரலானதால் திருப்பி ஒப்படைப்பு!

samugam-viral-news
By Nandhini Sep 09, 2021 09:17 AM GMT
Report

விநாயகர் சதுர்த்தி விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலமாகச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும், வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு, நீர்நிலைகளில் கரைக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் புளியங்குடியில் சாலையோரம் வடமாநிலத்தவர் ஒருவர் விநாயகர் சிலைகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். அங்கு அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த புளியங்குடி போலீசார் சிலைகளை பறிமுதல் செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினார்கள். இதைப்பார்த்தவர் சிலைகளை விற்பனைக்கு தானே வைத்திருக்கிறார்.

ஏன் பறிமுதல் செய்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த போலீசார், இதுதொடர்பாக காவல் ஆய்வாளரிடம் கேளுங்கள், காவல் நிலையத்தில்தான் உள்ளார் என பதிலளித்தார். சிலைகளை போலீசார் பறிமுதல் செய்ததை அங்கு இருந்தவர்கள் வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளிட்டனர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால், பெரும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், சிலைகள் திரும்பவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக காவல் ஆய்வாளர் ராஜாராம் தெரிவித்திருக்கிறார்.