ஒலிம்பிக் வீரர்களுக்கு தானே உணவு சமைத்து பரிமாறிய பஞ்சாப் முதல்வர்: வீடியோ வைரல்

samugam-viral-news
By Nandhini Sep 09, 2021 04:38 AM GMT
Report

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தனது கையால் உணவு சமைத்து பரிமாறினார். இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பஞ்சாப் மாநிலத்திலிருந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட வீரர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங், தனது பண்ணை வீட்டில் இரவு விருந்து கொடுத்தார். வீரர்களுக்கான மட்டன், சிக்கன் குழம்பு போன்ற உணவுகளை முதலவரே சமைத்து அசத்தியுள்ளார். இரவு விருந்தில் அவரே வீரர்களுக்கு உணவும் பரிமாறியுள்ளார்.

பஞ்சாப் வீரர்களுடன், ஹரியானைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவும் இந்த விருந்தில் கலந்துகொண்டார். முதலமைச்சர் அமரீந்தர் சிங் உணவு சமைத்து பரிமாறிய வீடியோ இதோ -