ஆஃப் பாயில் கொண்டு வர தாமதம் - ஆத்திரத்தில் ஓட்டலை அடித்து நொறுக்கிய போலீசார்
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் ஈபி காலனியை சேர்ந்த ஆயுதப்படை தலைமை காவலராக பாலசுப்ரமணியமும், திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் அருண்குமாரும், அவர்களது நண்பர் விஜியும் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஆப்பாயில் கேட்டுள்ளனர். ஆஃப் பாயில் வர தாமதம் ஆனது. இதனால், ஆத்திரமடைந்த 3 பேரும் ஹோட்டலில் சப்ளை செய்த 15 வயது சிறுவனை திட்டியுள்ளனர்.
அந்த சிறுவன் மீது ஆஃப் பாயிலை கொட்டி உள்ளனர். இதனை பார்த்து ஓடி வந்த ஓட்டல் முதலாளி ராம்குமார், அவர்களை தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும் ஹோட்டலில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து சூறையாடியுள்ளனர். இதில் ஓட்டல் உரிமையாளரின் மனைவியின் கையில் காயமும் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காவலர்கள் பாலசுப்பிரமணியன் அருண்குமார் அவர்களது நண்பர் விஜி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, காவலர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய எஸ்பி உத்தரவிட்டுள்ளார். தலைமறைவாக உள்ள விஜியை பிடிக்க காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.