‘என்னிடம் அப்பா தப்பா நடந்துக்குறார்...’ கண் கலங்கிய தங்கையால் சகோதரன் எடுத்த முடிவு? அதிர்ச்சி சம்பவம்

samugam-viral-news
By Nandhini Sep 08, 2021 08:45 AM GMT
Report

ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரைச் சேர்ந்த ஒருவருக்கு, ஒரு பெண்ணும், ஒரு மகனும் உள்ளனர். தந்தை அவரின் மகளை இரவில் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மகள் தனது தந்தையின் பாலியல் கொடுமை பற்றி அவரின் உறவுக்கார பெண்ணிடம் கூறியிருக்கிறார்.

அதை ஆடியோ கிளிப்பாகவும் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ கிளிப்பில், சிறுமி தனது அத்தையிடம், அவள் தூங்கும்போது கூட தனது தந்தை பாலியல் கொடுமை செய்வதாக கூறியுள்ளார். மேலும் புதிய மொபைல் போன் வாங்கி கொடுப்பதாக கூறி தந்தை தன்னை ஒரு மைதானத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் கூறினாள்.

மேலும் அவரை அவரின் தந்தை வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லக்கூடாது என்று மிரட்டுவதாகவும், இதை தன்னுடைய தாயாரிடம் கூறியதற்கு அவர் தன்னை திட்டியதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த ஆடியோ சனிக்கிழமையன்று ஊடகத்தில் வைரலாக பரவியது. அந்த ஆடியோவை அந்த பெண்ணின் சகோதரரும் கேட்டார் . பிறகு சகோதரியின் அவல நிலையை கேட்டு கலங்கிப்போன அந்த வாலிபர் நர்படா கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து, அந்த ஆடியோ பற்றி அறிந்ததும் போலீசார் விசாரணை நடத்தத் தொடங்கினார்கள். பிறகு பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

‘என்னிடம் அப்பா தப்பா நடந்துக்குறார்...’ கண் கலங்கிய தங்கையால் சகோதரன் எடுத்த முடிவு? அதிர்ச்சி சம்பவம் | Samugam Viral News