காதலியை துண்டு துண்டாக வெட்டி, பிளேடால் முகத் தோலை அகற்றிய கொடூர காதலன் - அதிர வைத்த சம்பவம்

samugam-viral-news
By Nandhini Sep 06, 2021 09:55 AM GMT
Report

சூரத் பகுதியைச் சேர்ந்தவர் வினய் ராய் (38). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதை மறைத்து பீகாரைச் சேர்ந்த சீதா பகத் (22) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். 2 வருடங்களாக அவரை காதலித்து வந்தபோது அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வினய்யிடம் சீதா பகத் கட்டாயப்படுத்தியுள்ளார்.

திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி அவரை சூரத் அழைத்து சென்றுள்ளார் வினய் ராய். தினமும் ஒரு காரணம் சொல்லி திருமணம் செய்துகொள்ளாமல் தப்பித்து வந்துள்ளார் வினய் ராய். காலம் நீடித்துக்கொண்டே சென்றதால் சந்தேகமடைந்த ஆத்திரம் அடைந்தார். இப்படித்தான் என்னை ஒருவன் காதலித்துவிட்டு ஏமாற்ற நினைத்தான். நான் அவன் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்து உள்ளே தள்ளிவிட்டேன்.

அதுபோல் நீயும் என்னை ஏமாற்ற நினைத்தால் உன் மீதும் போலீசில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துவிடுவேன் என்று கூறினார். இதைக் கேட்டு அதிர்ந்து போனார் வினய் ராய். உன் மீது போலீசில் புகார் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் உடனடியாக திருமணம் செய்து கொள்ளும் வழியை பாரு என்று சொல்லி உள்ளார் சீதா. போலீசுக்கு போனா விசயம் வீட்டிற்கு தெரிந்துவிடும்.

வீட்டினருக்கு இந்த விபரம் தெரிந்தால் நிலைமை சிக்கலாகிவிடுமே என்று பதறிய வினய் ராய், உடனே கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இருவரும் கிளம்பி மகாராஷ்டிரா சென்றனர். அங்கு சென்று திருமணத்திற்கு தேவையான துணிகள் எல்லாம் வாங்கி உள்ளனர். அதன் பின்னர் மாவட்டத்திலிருக்கும் ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

அங்கே ரயில் நிலையத்தை விட்டு கடந்து சென்று ரயில்வே தண்டவாளத்தில் நடந்து போயிருக்கிறார்கள். ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஒரு காட்டுப் பகுதிக்கு சீதாவை அழைத்து சென்றார் வினய். திருமணம் செய்து கொள்ளப் போகிறோமே என்று சீதாவும், வினய் ராய் பின்னாலேயே சென்றுள்ளார். காட்டுப் பகுதிக்குச் சென்றதும், சீதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார் வினய்.

போலீசுக்கு அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக உடலை துண்டு துண்டாக வெட்டினார். முகத்தை வைத்து அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதற்காக, முகத்தை பிளேடால் கிழித்து தோலை தனியே கிழித்தெறிந்தார். அதன் பின்னரும் கற்களை எடுத்து முகத்தை சிதைத்துள்ளார். தூரத்தில் இருந்த அடிபம்பில் கைகளை கழுவிக் கொண்டு ரத்தக்கறையை கழுவிக்கொண்டு அங்கிருந்து ரயிலில் நிலையம் வந்து சூரத் சென்றுவிட்டார் வினய். வழக்கம்போல் சூரத்தில் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார் வினய்.

இதற்கிடையில், கடந்த 24ம் தேதி அன்று நடந்த இந்த கொலை சம்பவத்தினை ரயில்வே தண்டவாளம் அருகே துண்டு துண்டாக உடைந்து கிடப்பதை போலீசார் அறிந்து, உடல் பாகங்களை கைப்பற்றினார்கள். கொலை செய்யப்பட்டவர் யார்? கொலையாளி யார் என்பதைக் குறித்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

ரயில்வே ஸ்டேஷன் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது, ஒரு பெண் வாலிபர் ஒருவருடன் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்தப் பெண் அணிந்திருந்த ஆடையின் சடலத்தின் மேல் இருந்த ஆடையை ஒன்றாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கொலை நடந்த காட்டு பகுதியில் செல்போன் டவர்களை ஆய்வு செய்த போலீசார் கொலையாளியை செல்போனை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, அந்த வாலிபர் யார் என்பது குறித்து தேடத் தொடங்கினர். அவர் சூரத் பகுதியைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரிய வந்தது அவர் சூரத் பகுதியை சேர்ந்தவர் என்பதை தெரிந்துக் கொண்ட போலீசார், சூரத் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சூரத் போலீசார் விரைந்து வினய் ராய் வீட்டிற்குச் சென்றனர். போலீஸ் வந்தது கண்டு திடுக்கிட்டார் வினய். தான் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக என்னவெல்லாமோ செய்து பார்த்தும் போலீசில் சிக்கி விட்டோம் என்று அவர் பதறினார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

காதலியை துண்டு துண்டாக வெட்டி, பிளேடால் முகத் தோலை அகற்றிய கொடூர காதலன் - அதிர வைத்த சம்பவம் | Samugam Viral News