முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஒரு அசத்தலான அறிவிப்பு - டுவிட்டரில் செம்ம ட்ரெண்டடிக்கும் பெரியார்!

samugam-viral-news
By Nandhini Sep 06, 2021 09:44 AM GMT
Report

பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ட்விட்டரில் பெரியாரின் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று காலை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.

அப்போது, பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்ற அதிரடி அறிவித்தார். யாரும் எழுத தயங்கியதை எழுதியவர் பெரியார். யாரும் பேச தயங்கிய தைரியமாக எடுத்து வைத்தவர் பெரியார். சாதி ஒழிப்பு, பெண்ணடிமை போன்றவையே பெரியாரின் இலக்கு. இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ அடித்தளமாக இருந்த பெரியாரை போற்றும் விதமாக சமூக நீதி நாள் கொண்டாடப்படும் என்று பேசினார். முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சட்டப்பேரவையிலேயே எதிர்க்கட்சிகள் இதற்கு மனப்பூர்வமாக வரவேற்பு அளித்துள்ளன. பாமக தலைவர் ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், கி.வீரமணி போன்ற அரசியல் தலைவர்களும் இதற்கு வரவேற்றுள்ளார்கள். தற்போது சமூக வலைத்தளங்கள் முழுவதிலும் பெரியாரின் வாசகங்கள் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டுவிட்டரில் #socialjusticeday #periyar #பெரியார் உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகிறது. முதல்வர் ஸ்டாலினின் அசத்தல் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிக்கும் விதமாக நெட்டிசன்கள் அதனை ட்ரெண்ட்டாக்கி வருகிறார்கள். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஒரு அசத்தலான அறிவிப்பு - டுவிட்டரில் செம்ம ட்ரெண்டடிக்கும் பெரியார்! | Samugam Viral News