அடிக்கடி மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாகிய மாமனார் - மருமகள் போலீசில் கதறல்
வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த ஓட்டேரி கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண். இவர் சித்தூர் மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீராமுலு என்பவரின் மகன் சதீஷ்குமாரை திருமணம் செய்தார். சொத்துக்காக மயங்கிய அப்பெண்ணின் தாயார் மணமகன் யார் என்று கூட சரியாமல் பார்க்காமல் பெண்ணிற்கு திருமணம் நடத்தி வைத்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகுதான் அப்பெண்ணிற்கு தெரிந்தது மாப்பிள்ளை மனநலம் சரியில்லாதவர் என்று. ஆனாலும் வேறுவழியின்றி அப்பெண் குடும்பம் நடத்தி வந்துள்ளார். திடீரென அப்பெண், வேலூர் மாவட்டம் பொன்னை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், ஒருமுறை மாமனார் எனக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். அதனால் அவரிடம் கேட்டு சண்டை போட்டேன். இதை வெளியே சொன்னால் தங்கையையும், அம்மாவையும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார்.
அதனால் நான் பயந்துகொண்டு யாரிடமும் சொல்லவில்லை. அதன் பின்னர் எனக்கு மயக்க மருந்து கொடுக்காமல் பல முறை மிரட்டி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். பெண் குழந்தையும் பிறந்தது. இத்தனை நாளும் பாலியல் பலாத்காரம் செய்து வந்த மாமனார், இப்போது குழந்தை பிறந்த பின்னர் என்னை கொடுமைப்படுத்தி வருகிறார் என்று வேலூர் மாவட்டம் பொன்னை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.