இது சரியல்ல... விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு ஏற்று நடத்த வேண்டும் - மதுரை ஆதீனம்
நாடு முழுவதும் வருகிற 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மேலும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் மட்டுமே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் பேசுகையில், விநாயகர் சதுர்த்தி விழா என்பது, இன்றல்ல நேற்றல்ல, அன்னியர்களை எதிர்த்து கொண்டாடப்பட்ட விழா. அதற்கு அரசு தடை விதித்திருப்பது சரி கிடையாது. விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.